செப்டம்பர் – 01 – 2017 – ஆம் ஆண்டு தான் விரும்பிய மருத்துவ படிப்பிற்கு இடம் கிடைக்காததால் அனிதா தற்கொலை செய்து கொண்டார் என்று அனைவராலும் கூறப்பட்டது.
அனிதாவின் மரணத்திற்கு ஒன்றிய அரசும், மாநில அரசும் தான் காரணம். ஒன்றிய அரசு மாணவர்களின் படிப்பை சிதைக்கும் வகையில் நீட் தேர்வைக் கொண்டு வந்ததன் மூலம் அனிதாவை தொடர்ந்து பல மாணவர்கள் உயிர் இழந்துக் கொண்டே இருக்கின்றனர்.
ஒரு நாடு வளர்ச்சியை நோக்கி செல்ல வேண்டும் என்றால் அந்த நாட்டில் கல்வி, பொருளாதாரம், மருத்துவம் இந்த மூன்றும் சிறந்து விளங்க வேண்டும். ஆனால் இந்தியாவில் முதலாளிகளுக்கு ஆதரவாகவும், முதலாளிகளின் நன்மைக்காக மட்டுமே செயல்படும் ஒன்றிய அரசு, மாணவர்களின் நலன்களை பற்றியோ, அவர்களின் படிப்பை பற்றியோ எந்த அக்கறையும் கிடையாது. மக்களின் நிலையும் இப்படித்தான் இருக்கிறது.
அனிதா அவர்கள் 12 – ஆம் வகுப்பில் 1200 மதிப்பெண்ணுக்கு 1176 பெற்றிருந்த போதிலும், நீட் தேர்வில் அவர்களால் வெற்றிபெற இயலவில்லை. மருத்துவ படிப்பிற்கு இந்த தகுதி போதாதா? ஒன்றிய அரசின் திட்டம் பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே மருத்துவம் என்பது தான்.
ஏழை எளிய மாணவர்கள் நிலை எப்படிச் சென்றல் அவர்களுக்கு என்ன? இந்த நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைந்து விட்டது. பணம் இருப்பவர்கள் கோச்சிங் சென்டர் சென்று படிப்பார்கள். பணம் இல்லாதவர்களின் நிலை என்ன ஆவது?
அன்பு தங்கை அனிதாவின் நினைவு நாளில், அவரின் மருத்துவ கனவு, உயிரைக் கொல்ல காரணமாக இருந்த இந்த நீட் என்னும் கொடிய தேர்வை ஒன்றிய அரசு மற்றும் தமிழக அரசு இணைந்து நீக்க வேண்டும் என்று தமிழக மாணவர் இயக்கம் கேட்டுக்கொள்கிறது.
அன்புத்தங்கை அனிதாவிற்கு வீரவணக்கம்.
தமிழக மாணவர் இயக்கம்.
கிருட்டிணகிரி மாவட்டம்.