ராசீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக சட்டமன்றம் ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானம் மத்திய உள்துறை அமைச்சருக்கு அனுப்பப்பட்டது.
தமிழக அரசின் வேண்டுகோளை உள்துறை அமைச்சர் பரிந்துரையின் அடிப்படையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் புறக்கணித்து ஏழு பேரையும் விடுதலை செய்ய மறுத்துள்ளார் .
தமிழக சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சியினரும் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை மத்திய அரசும் குடியரசுத் தலைவரும் மதிக்க மறுத்திருப்பது ஜனநாயக மரபுகளுக்கு எதிரானதாகும்.
தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்தோ அல்லது தமிழக அரசு அரசமைப்பு சட்டம் 161 கீழ் உள்ள இறையாண்மை அதிகாரத்தின் படியோ விடுதலை செய்யவேண்டும்.
தமிழினத்தின் மீது வெஞ்சினம் கொண்டு இந்திய அரசு செயல்படுகிறது. ஏழு தமிழர் விடுவிக்கப்படாமல் இங்கு இந்திய அலுவலகங்கள் இயங்க முடியாது என்ற அளவுக்கு மக்கள் திரள் போராட்டங்களை கட்டமைப்போம்.
ஏழு தமிழர் மட்டுமல்லாது இசுலாமிய சிறைவாசிகளும் , அரசியல் கைதிகளும் சொல்லொண்ணாத் துயரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.
அவர்களின் ஒட்டு மொத்த விடுதலைக்கும் நாம் குரல் எழுப்புவோம்.
செயற்குழு ,
தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம்.
15-06-2018