மனித குல விடுதலைக்கான ஆகச்சிறந்த தத்துவமான கம்யூனிச சித்தாந்தத்தை உருவாக்கிய பேராசான்களில் ஒருவர் , பத்தொன்பதாம் நூற்றாண்டின் தலைச்சிறந்த தத்துவவாதி காரல் மார்க்சின் உற்றத் தோழர் . பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான தத்துவ கையேடு கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை உருவாக்கிய தலைவர்களுள் ஒருவர் ஏங்கல்ஸ் . காரல் மார்க்ஸ் எழுதி விட்டுச்சென்ற மூலதனம் நூலை தொகுத்து இறுதி வடிவம் கொடுத்து உழைக்கும் மக்களிடம் கொண்டு சென்ற மார்க்சின் பாதி ஏங்கல்ஸ் . இன்றைய நிலையில் முதலாளித்துவ வாதிகளும் , அவர்களுக்கு சேவகம் செய்யும் காவி பாசிச வாதிகளும் தேசிய இனங்களின் மொழி , பண்பாடு , கலாச்சாரத்தை அழித்து , ஒற்றை கலாச்சாரத்தின் கீழ் நம்மை அடக்கியாள துடித்துக் கொண்டிருக்கின்றனர் . மக்களை சாதிகளாகவும் , மதங்களாகவும் பிளவுபடுத்தி ஒன்று சேர விடாமல் தங்களின் திட்டத்தை நிறைவேற்ற துடிக்கும் வேலையில் தமிழ் தேசிய இனத்தின் விடுதலைக்கான நமது போராட்டத்தில் தோழர் ஏங்கல்சும் துணை நிற்பார் . 05 – 08 – 2021 மாமேதை ஏங்கல்ஸ் நினைவு தினம் இன்று . தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம் கிருஷ்ணகிரி மாவடம் . தொடர்புக்கு : 7811099968 08:10 05-08-2021