
ஓசூரில் புதிய பண்பாட்டு முயற்சி
இளைஞர் ஒருங்கிணைப்பு இயக்கத்தின் சார்பில் ,வள்ளுவர் நாளில் வள்ளுவர் வேடமிட்டு வீடு வீடாகச் சென்று குழந்தைகளிடம் “நான் திருவள்ளுவர் தாத்தா வந்திருக்கிறேன் உங்களுக்குத் தெரிந்த திருக்குறள் சொல்லுங்கள்” என்று குழந்தைகளிடம் கேட்டு திருக்குறள் புத்தகத்தை பரிசாக வழங்கினோம்.
“கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி தமிழ்குடி, என்று சொல்லப்பட்ட வரலாறு நமக்கு உண்டு. உலகத்தின் தலைசிறந்த பண்பாடுகளில் தமிழர் பண்பாடு முக்கியமானது.
வரலாறுகள் இப்படியிருக்க இன்றோ தன்னுடைய மொழி, பண்பாடு,வரலாறுகளை மறந்து கொண்டிருக்கிறது தமிழினம். எனவே சாதி,மத அடையாளங்கள் இல்லாமல் நாம் ஒன்று சேர்ந்து கொண்டாடும் திருவிழா பொங்கல் விழா. இதை முன் வைத்து வள்ளுவர் மூலமாக நமது பண்பாட்டு மீட்பைத் தொடங்கியுள்ளோம்