கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், அதை கட்டுப்படுத்த ஈரான் நாட்டு அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அங்குள்ள சிறைகளில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக 70 ஆயிரம் கைதிகளை ஈரான் அரசு தற்காலிகமாக விடுதலை செய்துள்ளது.
அதே போல் தமிழகத்தில் உள்ள சிறைகளில் இருக்கும் கைதிகள் பாதிக்கப்படாமல் இருக்க அவர்களை தற்காலிகமாக விடுவிக்க வேண்டும்.
தமிழகத்தில் 9 மத்திய சிறைகள், பெண்களுக்கான 5 தனிச்சிறைகள், 9 மாவட்ட சிறைகள், 88 ஆண்களுக்கான கிளைச் சிறைகள், 8 பெண்கள் கிளைச் சிறைகள், ஆண்களுக்கான 2 தனி கிளைச் சிறைகள், 12 பார்ஸ்டல் பள்ளி, 3 திறந்தவெளிச் சிறை என மொத்தம் 138 சிறைகள் இருக்கிறது. இவற்றில் 18 ,000 க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் உள்ளனர்.
நீண்ட காலமாக சிறையில் வாடும் சிறையாளிகளுக்கு கடுமையான நோய் தொற்று இருப்பதால் அவர்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும். மேலும் தமிழக சிறைகளில் கைதிகள் மிகவும் இட நெருக்கடியில் தான் இருந்து வருகின்றனர் , சுகாதாரம் இல்லாமல் தான் வாழ்ந்து வருகின்றனர்.
எனவே , தமிழக சிறைகளில் வாடும் சிறைவாசிகளை தமிழக அரசு உடனே விடுவிக்க வேண்டும்.
தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம்
9894835373
19-03-2020