விஷ்வ ஹிந்து பரிசத் என்ற பயங்கரவாத அமைப்பு தமிழகத்தில் மத கலவரங்களை உருவாக்கும் நோக்கத்தில் நடத்தி வரும் ரதயாத்திரைக்கு அனுமதி வழங்கும் தமிழக அரசு,
ரத யாத்திரைக்கு அனுமதி கூடாது , தடை விதிக்க வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சி மற்றும் இயக்கங்களும் ஒருங்கிணைந்து இன்று தமிழக எல்லையான செங்கோட்டையில் போராட்டம் அறிவித்திருந்த வேளையில்
தமிழக அரசு நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு போட்டு முன்னணித் தோழர்களை, தலைவர்களைக் கைது செய்து கொண்டிருக்கிறது.
இச்செயலை தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
காவி பயங்கரவாதத்திற்கு துணை போகும் எடப்பாடி அரசே !
வி.இ.ப.அமைப்பின் ரத யாத்திரைக்கு தடை விதி !
கைது செய்துள்ள தோழர்களை விடுதலை செய் !
தமிழ் நாட்டு மக்களே !
காவி பயங்கரவாதத்திற்கு எதிராக அணிதிரள்வோம் !
தலைமைக் குழு
தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம்.
20 – 03 – 2018