தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகில் கடந்த 1.11.2017-ல் நடைபெற்ற மொழிவழி நாள் கூட்டத்தில், தமிழர்கள் இழந்த உரிமையை மீட்டெடுப்போம் என்ற தலைப்பில் பேசிய தமிழ்த்தேச மக்கள் கட்சியின் பொதுச்செயலர் தோழர். தமிழ்நேயன் மீது பட்டுக்கோட்டை நகர காவல் துறை மத்திய, மாநில அரசுகளைப் பற்றி அவதூறாக பேசியதாக புதன்கிழமை (21.3.2018) அன்று வழக்குப் பதிவு செய்தனர்.
அந்த வழக்கில் இன்று காலை காரைக்குடியில் வைத்து தோழர் தமிழ்நேயன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஜனநாயக விரோதச் செயலை தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தமிழக அரசே ! சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டுள்ள தோழர் தமிழ்நேயனை உடனே விடுதலை செய்.
தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம்
9894835373
20-03-2020