ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் எனும் அமைப்பை கட்டி, தென்மாவட்டங்களில் நிலவிய சாதிய ஆதிக்கத்திற்கு எதிராக களம் கண்ட சமூக நீதிப் போராளி.
சாதிக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களை ஒருங்கிணைப்பது, தீண்டாமைக்கு எதிராக போராடுவது, நாடகத்தின் மூலம் சாதியின் கோரத்தாண்டவத்தை அம்பலப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு சமூக சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டிருந்த தியாகி இமானுவேல் சேகரனை இதேநாளில் ஆதிக்க சாதி வெறியர்கள் வெட்டி படுகொலை செய்தனர்.
தனது 33 வயதில் படுகொலை செய்யப்பட்ட இமானுவேல் சேகரனின் துணிச்சலும், செயல்பாடும் ஆதிக்க சாதி வெறியர்களுக்கு எவ்வாறு எரிச்சலை உண்டுபண்ணி இருக்கும் என்பதை நாம் உள்வாங்கிக் கொண்டு, சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களையும், முற்போக்கு ஜனநாயக சக்திகளையும் உள்ளடக்கிய சாதி ஒழிப்பு அரசியலை முன்னெடுக்க வேண்டும்.
“சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிராக கடுமையான சட்டங்களை கொண்டுவர வேண்டும். பள்ளிகள், கல்லூரிகளில் சாதி அடையாளங்களுக்காக கயிறு கட்டும் வழக்கத்தை முற்றிலுமாக தடை செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க தமிழ்நாடு அரசை நாம் வலியுறுத்த வேண்டும்”
சாதியொழிப்புடன் கூடிய தமிழ்த் தேசியம் படைக்க இந்நாளில் உறுதி ஏற்போம்.
தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம்
கிருட்டிணகிரி மாவட்டம்.