தோழர் தமிழரசன் உள்ளிட்ட ஈகியருக்கு வீரவணக்கம்.
====================================
இந்திய அரசு குறிப்பாக மோடி தலைமையிலான பாஜக அரசு தமிழ்நாடு உள்ளிட்ட எல்லா தேசிய இனங்களின் உரிமைகளை காலில் போட்டு மிதித்து கொண்டிருக்கிறது.
தமிழகத்தின் இயற்கை வளங்களை, கனிம வளங்களைச் சுரண்டிக் கொண்டு இருக்கிறது.
தொழிலாளர் உரிமைகளை சட்டரீதியாகவே அழிக்கிறது. விவசாயிகளை நிலங்களிலிருந்து அப்புறப்படுத்துகிறது.
தாய் மொழியாம் தமிழ் மொழியை அழித்து இந்தி சமஸ்கிருதத்தை எல்லா வகையிலும் திணிக்கிறது.
இந்துத்துவக் கட்டமைப்பை உருவாக்கி சிறுபான்மையினர் வாழ்வுரிமை அழிக்கப்படுகிறது. இப்படி எல்லா வகையிலும் மக்கள் விரோத அரசாக மோடி அரசு இருக்கிறது.
இந்திய அரசு என்பது எப்போதும் தமிழ்நாட்டிற்குப் பகை அரசு தான் என்று தோழர் தமிழரசன் 40 ஆண்டுகளுக்கு முன்பே முழங்கினார்.
தேசிய விடுதலை என்பதே சரியான அரசியல் பாதை என்று முன்வைத்தார். அவரது அடியொற்றி முற்போக்கு இயக்கங்களும் தோழர் தமிழரசன் உள்ளிட்ட ஈகியர் வீரவணக்க நாளில் தமிழ் நாட்டின் அரசியல் பொருளாதார சமூக விடுதலைக்குப் போராட உறுதியேற்போம்.
அரசியல் விவாதங்களை முன்னெடுப்போம்.
போராட்டக் களத்தில்
கைகோர்ப்போம்.
தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம்
9894835373
செப் – 1 2021