தோழர்களுக்கு நன்றி !
பதிப்பகத்திற்கு சிறப்பான பெயர்களை முன்மொழியும்படி முகநூலில் கேட்டிருந்தோம். தோழர்களும் தங்களால் இயன்றளவு பெயர்களை முன்மொழிந்தனர். அவற்றுள் பெரும்பான்மைத் தோழர்களின் கருத்து ” செஞ்சோலை “செந்நிலா ” என்று தான் இருந்தது.
இவையிரண்டில் அமைப்பின் முடிவாக “செஞ்சோலை பதிப்பகம் “என்று தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஈழத்தில் நடத்தப்பட்ட செஞ்சோலைப் படுகொலையும் தமிழகத்தில் நடத்தப்பட்ட மாஞ்சோலைப் படுகொலையும் நாம் உருவாக்க வேண்டிய செஞ்சேனையையும் இது நினைவுபடுத்தட்டும்.
மற்றொரு பெயரான “செந்நிலா”வை நாங்கள் தொடங்க இருக்கும் கலைக்கூடத்திற்கு முன்மொழிந்துள்ளேன்.
ஒரு அறைக்குள் அமர்ந்து கொண்டு 10 பேர் விவாதித்து ஒரு பெயரைத் தேர்வு செய்வதை விட பல்லாயிரம் மக்களோடு இணைந்து பெயரைத் தேர்வு செய்து கொள்வது மிகச் சிறந்த அனுபவமாகவும், சிறப்பானதாகவும் அமைந்தது. பெயர்களைப் பதிவிட்ட அனைத்து தோழர்களுக்கும் நன்றி.
இந்த வெளியை மேலும் பயன்படுத்திக்கொள்வதன் மூலம் பதிப்பகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்ல முடியும் என நம்புகிறோம்.
தோழர்களின் துணையோடு தமிழ்த் தேசிய விடுதலை அரசியலுக்கு உற்ற துணையாக இருக்கும் வகையில் நூல்களை வெளியிடுவோம். நன்றி
03-02-2018