பத்திரிக்கையாளர் அன்பழகன் கைதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
…………………………………………………………..
சென்னையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில், பத்திரிகையாளர் வி.அன்பழகன் அவர்கள், மக்கள் செய்தி மையம் என்ற அரங்கத்தை நடத்தி வந்தார். அதில் .தமிழக அரசின் ஊழல்களை அம்பலப்படுத்தி நூல் விற்பனை செய்து வந்தார். இதைப் பொறுக்க முடியாத எடப்பாடி அரசு, பபாசியின் துணையுடன் தமிழக அரசுக்கு விரோதமான செய்திகள் அடங்கிய புத்தகங்கள் அங்கு இடம்பெற்று இருப்பதாகக் கூறி, அவரது புத்தக அரங்கத்தை தமிழ்நாடு காவல்துறையை வைத்து காலி செய்ய வைத்துள்ளது.

மேலும் அன்பழகன் மீது பபாசி உறுப்பினர்களைத் திட்டினார், தாக்க முயற்சித்தார் என்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 341 (Wrongful restraint- சட்டவிரோதமாகத் தடுத்து நிறுத்துதல்), 294(b) ஆபாசமாகப் பாடுதல், பேசுதல், 506(ii) கொன்றுவிடுவததாக மிரட்டுதல் ஆகிய பிரிவுகளில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊழல் அரசின் எடுபிடியாக பபாசி செயல்பட்டுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான இத்தகைய பாசிச அடக்குமுறைக்கு கடும் கண்டனத்தைத் தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பத்திரிகையாளர் அன்பழகன் மீது போடப்பட்ட வழக்கை தமிழக காவல்துறை திரும்பப் பெற்று, அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். பபாசியில் அவரது புத்தக அரங்கத்தை திறக்க அனுமதிக்க வேண்டும்.

தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம்
12 .01.2020
9894835373

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *