கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக கல்வித் துறையும் முடங்கி
உள்ளதால், நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் திறப்பது தாமதமாகி
வருகிறது. இந்நிலையில், புதிய கல்வி ஆண்டில் 9 முதல் 12-ம் வகுப்பு
வரை மாணவர்களின் பாடச் சுமையை 30 விழுக்காடு குறைப்பதற்கு மத்திய
இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) முடிவு செய்திருக்கிறது.
இந்நிலையில், 2020-21-ம் கல்வியாண்டுக்கான 9-ம் வகுப்பு முதல்
12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. இதில் அடிப்படையான மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய முற்போக்கான வரலாற்றுப் பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன.
11-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாட புத்தகத்தில் இடம்பெற்றிருந்த
கூட்டாட்சி, குடியுரிமை, தேசியம், மதச்சார்பின்மை ஆகிய அத்தியாயங்கள்
முழுமையாக நீக்கப்பட்டுள்ளன.
மேலும் உள்ளாட்சி அரசு நிர்வாகம்
ஏன் வேண்டும், இந்தியாவில் உள்ளாட்சி நிர்வாகத்தின் வளர்ச்சி ஆகியவையும்
இதேபோல 12-ம் வகுப்பு பாட திட்டத்திலிருந்து பாகிஸ்தான்,
மியான்மர், வங்கதேசம், இலங்கை, நேபாளம் ஆகிய அண்டை நாடுகளுடன்
இந்தியாவின் தொடர்பு, இந்திய பொருளாதார வளர்ச்சியின் மாறுதல் நிலை, இந்தியாவில் சமூக இயக்கங்கள், உயர் பணமதிப்பிழப்பு ஆகிய பாடங்கள்
அத்தியாயங்களும் நீக்கப்பட்டுள்ளன.
ஒரே நாடு ஒரே மொழி ஒரே சட்டம் என்று ஒற்றை பாசிச சர்வாதிகாரத்தை நிறுவ முயற்சிக்கும் மோடி அரசு மாணவர்கள் மத்தியிலும் அத்தகைய பாசிச நிலைப்பாட்டை பள்ளிக்கூட புத்தகங்கள் மூலம் திணிக்க முயற்சிப்பதை தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
இந்தியா பல்வேறு மொழிகளை பேசக்கூடிய தேசங்களைக் கொண்ட துணைக்கண்டம். வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இதுவரையிலான இந்தியாவின் பள்ளிக்கல்வியின் நிலைப்பாடாக இருந்தது அதை மறைத்துவிட்டு எந்த வேற்றுமையும் இல்லாததுபோல் காட்ட முயற்சிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
கொரானா தொற்றின் காரணமாக பாடங்களைக் குறைப்பது என்பது வரவேற்புக்குரிய விஷயம்தான் . ஆனால் அதை கல்வித்துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்டு, குறிப்பாக மத சார்பற்ற வரலாற்று ஆய்வாளர்களை ஒருங்கிணைத்து அந்த முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம்
9894835373