பழங்குடி / தாழ்த்தப்பட்ட மக்களின் நில உரிமைகளுக்காகவும் , மனித உரிமைகளுக்காகவும் போராடி வந்த
பாதிரியார் ஸ்டேன் சாமி அவர்களுக்கு செவ்வணக்கம்.
தமிழகத்தைச் சேர்ந்த பாதிரியார் ஸ்டேன் சாமி 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஜார்கண்ட் மாநிலத்தில் மனித உரிமை பாதுகாப்புப் பணிகளில் குறிப்பாக பழங்குடி மக்களிடையே களப்பணி ஆற்றி வந்தார்.
2018-ஆம் ஆண்டில் பீமா கோரேகான் வன்முறையை தூண்டியதாகவும், எல்கர் பரிஷத் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியதன் மூலம் வன்முறையை ஏற்படுத்தியதாகவும் இவர் மீது வழக்கு தொடரப்பட்டு கடந்த 2020 ஆம் ஆண்டு என். ஐ. ஏ மூலம் ஜார்கண்டில் கைது செய்யப்பட்டார்.
இவருக்கும் பீமா கோரோகன் நிகழ்வுக்கும் எவ்வித தொடர்பும் இல்லாத நிலையிலும் பாதிரியார் ராஞ்சியில் உள்ள தனது இல்லத்திலிருந்து கடத்தப்பட்டு பிறகு கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.
மகாராஷ்டிராவில் உள்ள தலேஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் ஸ்டேன் சாமி. 85 வயதான ஸ்டேன் சாமி பர்கின்ஸன் நோய் உட்பட பல்வேறு நோய்கள் மற்றும் குறைபாடுகளால் அவதிப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் ஸ்டேன் சுவாமிக்கு போதிய மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை . இவர் இரண்டு முறை பிணை மனு தாக்கல் செய்தும் கூட என்ஐஏ நீதிமன்றம் இவரின் பிணை மனுவை நிராகரித்துவிட்டது. தற்போது கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்தார்.
கொரோனாவில் இருந்து பாதுகாப்பதற்கான சிகிச்சையும், அவரின் உயிரைக் காப்பதற்கான சிகிச்சையும் வழங்க வேண்டும்” என்று மனித உரிமைகள் ஆணையமும் பல்வேறு மனித உரிமைச் செயல்பாட்டாளர்களும் கோரி வந்த நிலையில் அரசாங்கம் அதை செவிமடுக்காமல் பாதிரியார் ஸ்டேன் சாமியைச் சாகடித்துள்ளது.
பழங்குடி, தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் , மனித உரிமைகளுக்காகவும் தொடர்ந்து போராடி வந்த பாதர் ஸ்டேன் அவர்கள்
பாஜக – மோடி அரசால் பயங்கரவாதியாக அடையாளப்படுத்தி சாகடிக்கப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
பாதிரியார் ஸ்டேன் சாமி அடைக்கப்பட்டிருந்த தாலொஜியா சிறையில் தான் இதே வழக்கில் கைது செய்யப்பட்ட மற்ற எழுத்தாளர்கள், கவிஞர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை இந்திய அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம்
9894835373
05-07-2021