வன்மையாகக் கண்டிக்கிறோம்.
………………………………………………
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில், சி.ஏ.ஏ., என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சி-க்கு எதிராகவும், தமிழக அரசு அதற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் நேற்று (பிப்14) ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தரதரவென இழுத்து அவர்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளது. அந்தத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார், நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். காவல் துறையின் இந்தக் கோரத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
மோடி அரசின் கைப்பாவையாக இருந்து கொண்டு எடப்பாடி அரசு காவல்துறையைக் கொண்டு அமைதி வழியில் போராடிய இசுலாமியர்கள் மீது அடக்கு முறையை ஏவியுள்ளது கண்டிக்கத்தக்கது.
தமிழக மக்களே , சி.ஏ.ஏ. உள்ளிட்ட பாசிசச் சட்டங்கள் இசுலாமியர்களுக்கு மட்டும் எதிரானது இல்லை, அனைத்து மக்களுக்கும் எதிரானது என்பதைப் புரிந்து கொண்டு அனைவரும் போராட்ட களத்திற்கு வர வேண்டும்.
இசுலாமியர்களைத் தனிமைப்படுத்தி அவர்களை ஒடுக்க நினைக்கும் பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ் கும்பல்களுக்கு எதிராக அணிதிரள வேண்டும்.
தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம்
15-05-2020