27-08-2011 அன்று டெல்லியை சேர்ந்த சாபியா என்ற பெண் காவலரை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி, பிறப்பு உறுப்புகள் சிதைக்கப்பட்டு, மார்பகங்கள் அறுக்கப்பட்டு, 50 இடங்களுக்கு மேல் கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளனர்.
குடும்பத்தை விட்டு வெளியேறி நிஜாமுதீன் என்பவருடன் வசித்து வந்துள்ளார். இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்படவே, நிஜாமுதீன் இந்த படுகொலையை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். டெல்லி காவல்துறை நிஜாமுதீன் ஒருவர்தான் குற்றவாளி என்ற ரீதியில் விசாரித்து வருகிறது.
இந்த கொடூர செயலை நிஜாமுதின் ஒருவர்தான் செய்திருப்பாரா என்ற சந்தேகம் எழுகிறது. எனவே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி காவல்துறை, தனது மெத்தனப் போக்கை கைவிட்டு, சாபியாவிற்கு நீதி கிடைக்க துரித விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்து கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும்.
ஆணாதிக்க சிந்தனையும், ஆண் – பெண் சமத்துவமின்மையுமே இதுபோன்ற கொடூர கொலைகளுக்கு காரணமாக அமைகிறது. ஆண் – பெண் சமத்துவத்திற்கான பாலியல் கல்வியை பாடத்திட்டங்களில் சேர்த்து கற்பித்தால் மட்டுமே இதுபோன்ற கொடூர செயல்கள் தடுக்க வழி வகை ஏற்படும்.
நிஜாமுதீன் தவிர்த்த மற்ற குற்றவாளிகளையும் விரைந்து கைது செய்து கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று, தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம் கேட்டுக் கொள்கிறது.
Justice_for_shabiya
தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம்
கிருட்டிணகிரி மாவட்டம்